திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக 23.10.2024ம் தேதி அதிகளவு பெய்த மழையினால் அனைத்து சாலை ஓரங்களிலும் தேங்கிய மழைநீரினை மாநகராட்சி வாகனங்கள் மற்றும் தனியார் வாகளங்கள் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வெறியேற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

அரியமங்கலம் பழைய பால்பண்ணை, காட்டூர் மற்றும் திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை. காரணமாக சாலை ஓரங்களிலும் தேங்கியுள்ள மழை நீர் அனைத்தும் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதி சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. மேலும், மேலஅம்பிகாயுரம் மற்றும் கீழஅம்பிகாபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் 24.10.2025ஆம் தேதி இரண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தோல் நோய் பிரச்சனை மற்றும் சுவாச கோளாறு சம்மந்தப்பட்ட நோய்களின் பாதிப்பு குறித்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இம்மருத்துவ முகாம்களின் மூலம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர்கள் மருத்துவ பரிசோதனை பெற்று பயனடைந்துள்ளனர்.
இம்மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் நன்னீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தி உள்ளதா என்பதை கண்டறிந்து கொசுப்புழு உற்பத்தி கலன் களான டயர், கொட்டாங்குச்சி காலிடப்பாக்கள், உடைந்த மண்பாணைகள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவை அக்கற்றப்பட்டன. டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில் அனைத்து வீடுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு காய்ச்சல் உள்ள நபர்களை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு பயனடைந்து வருகின்றனர்.

மேலும் இம்மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொசுஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தொடர்ந்து இம்மாதிரியான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments