தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு கட்டப்பட்ட தனி வீடுகளை காணொளி காட்சிமூலம் திறந்து வைத்தார்.
அதில் திருவெறும்பூர் அருகே வாழவந்தான் கோட்டையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் மொத்தம் 30 வீடுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் காணொளியை காட்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா மேடை சரியில்லை என்றும் விழா மேடை தாமதமாக அமைக்கப்பட்டது.

மேலும் காணொளி காட்சி சரிவர நெட்வொர்க் கிடைக்கவில்லை உள்ளிட்ட காரணங்களுக்காக திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமணியை திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments