திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. இது இந்திய ரயில்வேயின் தென்மண்டலத்தில் அமைந்துள்ள மூன்று ரயில்வே பணிமனைகளில் மிகப் பெரிய பணிமனையாகும். இப்பணிமனையின் நோக்கமே நீராவி இன்ஜின்களை உற்பத்தி செய்வதும், டீசல் மற்றும் ரயில் பெட்டிகளை பழுது பார்ப்பதும் ஆகும். ஊட்டி மலையில் இயக்கப்படும் மலை ரயில் திருச்சி பொன்மலையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 4 என்ஜின்கள் இங்கு தயாரிக்கப்பட்டு ஊட்டியில் இயங்கி வருகின்றன. அவை நிலக்கரியில் ஓடினாலும் அவற்றை ஆன் செய்யும் போது ஏதாவது எண்ணெயில் தான் ஆன் செய்யவேண்டும். இதற்காக உலை ஆயில் (ஃபர்னஸ் ஆயில்) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த என்ஜினை ஆன் செய்யும் போது அதிகளவில் புகை எழும்பும். இதனால் உலை ஆயிலுக்கு மாற்றாக அதிவேக டீசல் பயன்படுத்தும் உள்நாட்டு தொழில் நுட்பத்துடன் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் என்ஜின் தயாராகியுள்ளது.
இதில் என்ஜினை ஆன் செய்ய பயன்படுத்தும் அதிவேக டீசலை இருப்பு வைத்துக்கொள்ள 1,600 லிட்டர் கொள்ளவுள்ள டீசல் டேங்க் மற்றும் நிலக்கரி மூலம் நீராவி உருவாக்க கொதிக்க வைக்க பயன்படுத்தப்படும். தண்ணீர் நிரப்பி வைக்க 4,500 லிட்டர் கொள்ளவுள்ள 2 தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில் என்ஜினின் முன்பகுதியில் அதிக ஒளிரும் தன்மையுடன் கூடிய டிஜிட்டல் விளக்குகளும், அதேபோல என்ஜினின் உள்பகுதியிலும் எல்.இ.டி .பல்புகளும் உள்ளது. இந்த சிறப்பு ரயில் என்ஜினை ரூ. 9.30 கோடி மதிப்பில் 70 பேர் கொண்ட குழுவினர் கடந்த பிப்ரவரி துவங்கி 7 மாதங்களில் வடிவமைத்துள்ளனர்.
இந்த என்ஜின் இயக்கத்துக்கு பின்னர் இதில் காணப்படும் நிறை குறைகளை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த ரயில் என்ஜின்களும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதே பணிமனையில் புனரமைப்பு செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றைக்கொண்டு ஊட்டி மலை ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த என்ஜின் லாரி மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments