திருச்சி மாவட்டத்தில் தீபாவளிக்காக திமுக நிர்வாகிகளுக்கு பணம் பட்டுவாடா நிலைபெற்று வருகிறது. திருச்சியில் 9 சட்டமன்ற தொகுதியிலும் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த சட்டமன்ற தொகுதிக்கு எம்எல்ஏக்கள் நிர்வாகிகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என உத்தரவு. இந்நிலையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அத்தொகுதி நிர்வாகிகளை கவனித்துக் கொண்டு வந்தார். இந்நிலையில் ஸ்ரீரங்கம் தற்போதைய பகுதி செயலாளர் ராம்குமார் பண விவகாரங்களை கவனித்து வந்துள்ளார்.
திருவானைகாவல் பகுதி வட்ட செயலாளர் சிவ கண்ணன் நிர்வாகிகளுக்கு பணம் பட்டுவா செய்ய 11 கவர் கையில் வைத்திருந்தார். இதில் ராம்குமார் கோஷ்டி கறிகடை சரவணனுக்கும், துரைக்கண்ணன் கோஷ்டிக்கும் நேற்று இரவு திருவானைக்காவல் தெற்கு தெரு பகுதியில் மோதல் ஏற்பட்டது. மோதலில் சிவகண்ணனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிவகண்ணன் ராம்குமார் தரப்பில் ஸ்ரீரங்கம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
கடைசியில் திமுக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இருதரப்பினரையும் சமாதானம் செய்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். திமுக நிர்வாகிகளுக்குள் பணம் பட்டுவாடா விவகாரத்தில் கத்திகுத்து விழுந்த சம்பவம் அக்கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision
Comments