தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (18.02.2025) அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்டபட்ட பஞ்சப்பூரில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் ரூபாய் 403 கோடி மதிப்பீட்டில் 5.58 இலட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன் கூடிய டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
2000-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். இது மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மாபெரும் வளர்ச்சி பெற வித்திட்டது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையிலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சூழல் அமைப்பை பரவலாக்கும் முயற்சியின் அடுத்தகட்டமாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூரில், ரூ.403 கோடி மதிப்பீட்டில் 5.58 இலட்சம் சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் IT, ITeS, BPOs, Startups போன்ற நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அப்பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், மேற்பார்வை பொறியாளர் (தமிழ்நாடு மின்சார வாரியம்) பொறி. பி.சே.மேரிமேக்டலின் பிரின்ஸி, உதவி செயற்பொறியாளர் (டைடல் பூங்கா) செ.செந்தில்ராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், டைடல் பூங்கா கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments