திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் எதுமலை SKD திருமண மண்டபம் மற்றும் பிச்சாண்டார் கோவில், உத்தமர்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.08.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 15.07.2025 அன்று தொடங்கி வைத்த திட்டத்தின் கீழ், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தம் 351 முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், நகர்ப்புறப் பகுதிகளில் 108 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 243 முகாம்களும் இடம்பெற்று, அரசு துறைகளின் பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன. மேலும், மருத்துவ சேவைகளும் முகாம்களுடன் இணைந்து வழங்கப்படுகின்றன.
இன்று நடைபெற்ற முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை விரைவாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

Comments