Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வாக்குச்சாவடிகளுக்கு எழுதுப்பொருட்கள்  அனுப்பும் பணியை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குபதிவு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில்  அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தேவையான எழுது பொருட்கள், பென்சில், பேப்பர், பேனா, ரப்பர், மை, நூல், அரக்கு போன்ற பல்வேறு பொருட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.திவ்யதர்ஷினி  நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி (கிழக்கு) தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் உடனிருந்தார்.

இதனை தொடர்ந்து திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தேவையான எழுது பொருட்கள் போன்றவற்றை வழங்கும் பணியில் நேரில் ஆய்வு செய்தார். திருச்சி வருவாய் கோட்டாட்சியர்  விசுவநாதன் உடனிருந்து ஆய்வு மேற்க்கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *