திருச்சி மாவட்டம் லால்குடி கல்வி மாவட்ட அளவிலான குரு வட்ட எறிபந்து போட்டி செங்கரையூர் TELC உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவில் பள்ளி தாளாளர் பால சாந்தகிரின் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப் கனகராஜ் வரவேற்று பேசினார். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலமுருகன் (செங்கரையூர்), முத்துசாமி (கே.வி.பேட்டை) தங்க அறிவழகன் (ஆதிகுடி) மற்றும் பள்ளி நலக்குழு உறுப்பினர்கள் சபாபதி, விவேக், ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இப்போட்டிகளில் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200 பேர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி காட்டினர். இறுதியாக உடற்கல்வி ஆசிரியர் ஜோயஸ் நன்றி கூற விழா இனிதே முடிவடைந்தது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments