Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அமைச்சர் முன்னிலையில் திமுக பகுதி செயலாளரை எட்டி உதைத்த வட்ட செயலாளர்

No image available

அமைச்சர் முன்னிலையில் திமுக பகுதி செயலாளரை எட்டி உதைத்த வட்ட செயலாளர் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக BLA 2 பாகநிலை முகவர்கள் கூட்டம் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு

 தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், BLA2 பாக நிலை முகவர்கள், BLC பூத் கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை

 அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்… திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் ரூபாய்.5000 கோடிக்கு மேலாக வளர்ச்சித் திட்டத்தை முதல்வர் வழங்கியுள்ளார். நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம். திமுக கூட்டணியில் புகைச்சல் இருப்பதாக பா.ஜ.க வினர் கூறுகிறார்கள். எங்கள் கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.க – அதிமுக கூட்டணியில் தான் யார்

 முதலமைச்சர் வேட்பாளர் என்கிற பிரச்சினை சென்று கொண்டுள்ளது. கூட்டணி ஆட்சியா இல்லையா என்கிற பிரச்சினை சென்று கொண்டுள்ளது. பா.ஜ.க – அதிமுக கூட்டணி அவர்கள் கட்சி தொண்டர்களே ஏற்று கொள்ளாத கூட்டணியாக உள்ளது.ஆனால் திமுக கூட்டணி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டணி. இன்று வேறு ஒருவரும் களத்திற்கு வந்துள்ளார். திமுக எம்.ஜி.ஆரையே பார்த்த கட்சி. செல்வாக்கு மிக்க எம்.ஜி.ஆரையே பார்த்த திமுகவினர் இதையும் பார்ப்பார்கள் இதற்கு

 மேலேயும் பார்ப்பார்கள். தேர்தல் வருவதற்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ளது. இருந்த போதும் அப்போது சென்று மக்களை சந்திப்பதை விட தற்போதே மக்களை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் தற்போது செய்ய வேண்டும் என கூறியுள்ளார். பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பேசுகையில்.. இன்று நம்முடைய வாழ்வில் தொழில்நுட்பம் அத்தியாவசியமாகிவிட்டது. அதன் காரணமாகவே திமுகவிலும் டிஜிட்டல் முறையில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதனை பயன்படுத்தி நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும் என பேசினார். அப்போது பேசிய அந்தநல்லூர் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ் ஸ்ரீரங்கம் நகரம் சரியாக செயல்படவில்லை அதை சரிப்படுத்த வேண்டும் என்று பேசினார். அப்போது குறுக்கிட்ட ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார், 2021 தேர்தலை விட கடந்த எம்பி தேர்தலில் ஸ்ரீரங்கம் நகரப் பகுதியில் 7 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளோம்

 என்றார் அப்போது திடீரென வட்ட செயலாளர் ஜனா மற்றும் அவரது ஆதரவாளர்கள் எழுந்து சென்று சத்தம் போட்டதோடு பகுதி செயலாளர் ராம்குமாரை எட்டி உதைத்தாக கூறப்படுகிறது. ஜனா ஆதரவாளர்களும் ராம்குமாரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் அவர்களை தடுத்து

சமாதானப்படுத்தியதாகவும் அமைச்சர் நேரு சத்தம் போட்டு அவர்களை அமர வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் நேரு இது போன்ற சம்பவம் திருச்சி திமுகவில் நடந்தது இல்லை ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று நிர்வாகிகளை பார்த்து கடிந்து கொண்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *