தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் பெருமளவில் திரண்டுள்ளனர். தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் குடும்பத்துடன் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டமாக வந்துள்ளனர்.இதனால், திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளின் நெரிசலை சமாளிக்க ரயில்வே கோட்ட மேலாளர் உத்தரவின்பேரில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் பயணிகளை வரிசைப்படுத்தி நிறுத்தி, ரயில்களில் ஒழுங்காகவும் பாதுகாப்பாகவும் ஏறிச் செல்ல வழிவகுத்து வருகின்றனர். ரயில் நிலையம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments