Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திமுக, அதிமுகவிற்கு சுயமரியாதை பற்றி பேச அருகதை இல்லை என திருச்சியில் சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மணப்பாறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த சீமான்…. கோவையில் நடைபெற்ற நிகழ்வு மட்டும் அல்ல இது போல் பல சம்பவங்கள் வன்புணர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சகித்துக் கொள்ள முடியாதது இதுபோல் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

இந்த சமூகம் கேடு கெட்டதாகிவிட்டது எங்கு பார்த்தாலும் போதை, கோவையில் அந்த இடத்தில் 24 மணி நேரமும் முறையற்ற மது விற்பனை நடைபெற்றிருக்கிறது. அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்ல இதை பார்க்கும் நாம் அனைவருமே வெட்கி தலை குனிய வேண்டிய சம்பவம் அது. கடும் சட்டங்கள் இருந்தால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் நடக்காது இதே போல் தான் பொள்ளாச்சியில் நடந்தது , அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது ஆனால் நடவடிக்கை ஒன்றும் இல்லை.

எடப்பாடி பழனிச்சாமி நான் விமர்சிக்கவில்லை உண்மையை சொன்னேன் அவர்கள் பேசுவதை ஒரு பொது மனிதனாக நீங்கள் பாருங்கள் துரோகத்தைப் பற்றி பேசுவது சமூகநீதி பேசுவது சுயமரியாதை பேசுவதற்கு இவர்கள் யாருக்காவது தகுதி உள்ளதாமேலே பறந்து சென்ற விமானத்தை பார்த்து கும்பிட்டார்கள் அது சுயமரியாதையில் வருகிறதா, நான் தான் திராவிடத்தின் உண்மையான வாரிசு என்கிறார்களே அப்போது எனக்கு கோபம் வராதா.

உதயநிதி காலில் விழுவதையும் நான் கூறியுள்ளேன் திமுக அதிமுகவிற்கு சுயமரியாதை பற்றி பேச அருகதை இல்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு கர்நாடகா தெலுங்கானாவில் எடுக்கும் பொழுது தமிழக அரசு ஏன் எடுக்க மறுத்து மத்திய அரசை எடுக்கவேண்டும் என ஏன் கூறுகிறது.

பாரதிய ஜனதா கட்சி தேவையற்ற வேலையை செய்துகிறது மக்களை எப்பொழுதும் பதட்டமாக வைத்திரு என ஹிட்லர் சொன்னது போல் செய்கிறது.சி ஐ ஏ எடுத்து வந்து அதில் ஒன்றரை ஆண்டுகள் காலத்தை ஓட்டியது. தற்பொழுது சிறப்பு வாக்காளர் எனக் கூறி நான் கேட்கும் ஆவணங்களை கூறினால் தான் வாக்கு என்கிறது. இல்லையென்றால் வாக்குகளை நீக்கிவிடும்.

கூட்டம் நெரிசலுக்கு காரணம் தனி மனிதன் அல்ல என அஜித்குமார் கூறியது நான் கூறியதைத்தான் அவரும் வலியுறுத்துகிறார்.

அஜித் கூறியது இந்த முறையே தவறு என்கிறார் அங்கு சென்ற மக்கள் வேலையின் குற்றம் உண்டு இது போன்ற கலாச்சாரமே தவறு என்பதை தான் அவர் சாடுகிறார்.

அமெரிக்கா போல் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு அரை மணிநேரம் ஒரு கட்சிக்கு என அனைத்து கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

கே என் நேரு விவகாரத்தில் அவர்கள் அமைச்சர் மேல் அவர்கள் எப்படி வழக்கு பதிவு செய்வார்கள் என்றார்.

நாம் தமிழர் கட்சியை பொருத்தவரை தமிழகத்தில் கட்சிகளுக்கான போட்டி கிடையாது இது கருத்தியல் போட்டி தான்.

தேர்தலில் எந்த கட்சியை பணம் கொடுக்காமல் நிற்கும் நான் வைத்துள்ள 36 லட்சம் ஓட்டு ஒரு பைசா பணம் கொடுக்காமல் பெற்ற ஓட்டு என்றார்.

நான் தேர்தல் அரசியலுக்கு வந்து பத்து வருடங்கள் தான் ஆகிறது நீங்கள் 20 வருடம் எனக் கூறுகிறீர்கள் என் மீது உங்களுக்கு என் அவ்வளவு வெறுப்பு. நான் ஜெயிக்கவில்லை உங்களுக்கு என்ன பிரச்சனை, நீங்க எனக்கு ஓட்டு போட்டீர்களா, எனக்கு வாக்களித்துவிட்டு கேள்வி கேளுங்கள் நான் ஜெயிப்பேன் என்றார்.

வைகோ விற்கும் எனக்கும் என்ன தகராறு வாய்க்கால் தகராறா.. அண்ணன் தம்பி உறவு வேறு இது வேறு என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *