சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க ஸ்டாலின் இடையே சொற்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடையே கொண்டு சேர்க்க பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் முறையிலும் தங்களுடைய பரப்புரை செய்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு அதிமுக மற்றும் திமுக இருவரும் வெளியிட்ட டிஜிட்டல் அறிக்கையில் ஒரே பெண்ணின் புகைப்படம் இடம் பெற்றது சர்ச்சைக்குள்ளானது. அதிமுகவின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் சில தினங்களுக்குள் திமுகவும் தங்களது அறிக்கையை திருச்சியில் நடைபெற்ற பேரணியில் வெளியிட்டது. அதில் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக வாசகங்களை கொண்டிருந்ததன .
ஆனால் இரண்டு கட்சிகளின் டிஜிட்டல் அறிக்கைகளிலும் ஒரே பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது பற்றி நிபுணர்கள் கூறியதாவது,… ஒரே வலைதளத்திலிருந்து இந்த புகைப்படங்கள் எடுக்கப்படும் போது இப்படியான நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளனர் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments