சிறப்பு வாக்காளர் திருத்தச் சட்டத்தை கண்டித்து தமிழக முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மையம் உட்பட கட்சியினர் இன்று மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகம் அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர்மெய்தீன் தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தில் திமுக கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின்குமார், மாநகரட்சி மேயர் அன்பழகன், நிர்வாகிகள் வைரமணி, மாமன்ற உறுப்பினர் மதிவாணன்,
விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்திஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், குரு அன்புசெல்லம், நிர்வாகிகள் ஜெயக்குமார், கஸ்தூரி, சிறுத்தை குணா காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவா ரெக்ஸ், மதிமுக சார்பில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம்,
மனித நேய மக்கள் கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, இ.கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜ். சிவா, சுரேஷ்முத்துசாமி மாமன்ற உறுப்பினர் சுரேஷ் , ம.கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸீதர் உட்பட கூட்டணி கட்சியின் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments