திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுவேன் 24ஆம் தேதி விருப்ப மனு அளிக்க உள்ளதாக கே.என். நேரு திருச்சி யில் அறிவிப்பு

திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுவேன் 24ஆம் தேதி விருப்ப மனு அளிக்க உள்ளதாக கே.என். நேரு திருச்சி யில் அறிவிப்பு


பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் வரும் 22 ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான திமுக கட்சியினர் திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது.

  திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட வரும் 24 ம் தேதி விருப்ப மனு கட்டவுள்ளேன் என  திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு திருச்சி சிறுகனூரில் உள்ள திமுக மாநாட்டு திடல் அருகே கட்சி நிர்வாகிகளிடம் பேசினார்.

விவசாய கடன் தள்ளுபடியில் நடந்துள்ள முறைகேடுகள், ஊழல்கள் குறித்த பட்டியலை திமுக ஆட்சிக்கு வந்ததும் வெளியிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திமுக முதன்மை செயலாளர் நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


முன்னதாக திமுகவின் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் வருகிற 22-ஆம் தேதி பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் ,மார்ச் 14ஆம் தேதி திமுகவின் 11 வது மாநில மாநாடு அறிவித்த திமுக தலைவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் மார்ச் 1ஆம் தேதி திமுக தலைவரின் பிறந்தநாளை அனைத்து பகுதியிலும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!

https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH