Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

DMK பைல்ஸ் 3 – 2025 ல் வெளியிடப்படும் – கூட்டணி கட்சிகளின் டெண்டர் முறைகேடுகள் வெளியிடப்படும் – திருச்சியில் அண்ணாமலை பேட்டி.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை…. மதுரை பகுதியில் விவசாயிகள் ஒரு மாத காலமாக பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர் இந்த விவகாரத்திற்கு காரணம் மத்திய அரசு கிடையாது.

தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு ஹிந்துஸ்தான் நிறுவனம் இதில் பங்கேற்று ஒப்பந்தம் அவர்களுக்கு கிடைக்கப்பெற்று பத்து மாத காலம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. கிராம மக்கள் போராட்டம் அறிவித்த பிறகு தமிழக அரசு அப்படியே தனது பேச்சை மாற்றி இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது போல் செயல்படுகின்றனர்.

நேற்றைய சட்டமன்றத்தில் கூட தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் நான் எதிர்ப்பேன் முதலமைச்சரின் பதவியை கூட துறப்பேன் என முதல்வர் கூறியுள்ளார். டிசம்பர் மாதமே பாரதிய ஜனதா கட்சி அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இந்த பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு உங்கள் மனது புண்படும்படி நடந்து கொள்ளாது என உறுதி அளித்திருந்தோம்.

இந்த பிரச்சனை தொடர்பாக நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தோம் டங்ஸ்டன் சுரங்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டிருந்தோம். பின்னர் தொலைபேசியில் அத்துறை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி அவரிடம் இங்குள்ள பிரச்சினைகளை விளக்கி கூறி தமிழக அரசு இப் பிரச்சனையை திசை திருப்பி விட்டுள்ளது எனக்கு கூறினோம். அவர்கள் டெல்லிக்கு எங்களை வரச் சொல்லி உள்ளனர்.

நானும் மத்திய அமைச்சர் முருகனும் டெல்லி சென்று ஒரு நல்ல முடிவோடு தமிழகத்திற்கு திரும்பி வருவோம். நாங்கள் காலையில் கடிதம் எழுதி விட்டோம், மத்திய அமைச்சரிடம் பேசிவிட்டோம் எனத் தெரிந்தும் சட்டசபையில் முதலமைச்சர் இப்பிரச்சனை தொடர்பாக நாடகம் ஆடியுள்ளார். தமிழகத்தில் தீங்கு விளைவிக்க கூடிய பிரச்சனைகளுக்கு எல்லாம் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டுமென்றால் முதலில் அவர் டாஸ்மார்க் பிரச்சனைக்கு தான் ராஜினாமா செய்ய வேண்டும்.

அரசியலுக்காக டங்ஸ்டனுக்காக ராஜினாமா செய்வேன் என்று சொல்லக்கூடிய முதல்வர் அவருடைய சொந்த கட்சிக்காரர்கள், சொந்த அரசு நடத்தக்கூடிய டாஸ்மார்க் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியது பெண்களின் தாலி அறுப்பதற்கு காரணமாக உள்ளது என்பதற்காக அவர் பதவி விலகினால் அவர் சட்டமன்றத்தில் பேசிய பேச்சுக்கு மரியாதை இருப்பதாக கருதுகிறேன். என்னை பொருத்தவரை டங்ஸ்டன் சுரங்க பிரச்சனை தொடர்பாக நாங்கள் டெல்லி சென்று திரும்பும் பொழுது ஒரு நல்ல முடிவுடன் வருவோம் அதன் பிறகு அங்கு சென்று அந்த விவசாயிகளை சந்திப்போம் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை பற்றி கருத்து கூற ஒன்றுமில்லை அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அவர்கள் பேசிய சில விஷயங்களைப் பற்றி நாங்கள் கருத்து கூறினோம். ஆதவ் அர்ஜுனாவை நீக்கியது அவர்கள் கட்சியின் உட்கட்சி பிரச்சனை. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எப்படி உள்ளது என்பதற்கு அந்த புத்தக வெளியீட்டு விழா ஒரு சாட்சி. காவல்துறையினரை பார்த்து ரவுடிகள் பயந்த காலம் போய் தற்பொழுது பயமில்லாத சூழ்நிலையை இந்த திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் காவல்துறையின் கைகளில் கட்டப்பட்டுள்ள கயிறுகளை அவிழ்த்து விட வேண்டும் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட விடுங்கள். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்துள்ளது புதிது அல்ல இது நடைமுறையில் உள்ளது தான். என் மீது திருமாவளவனுக்கு திடீரென கோபம் வந்துவிட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை நடத்துவது திருமாவளவனா அல்லது அவரது துணை பொது செயலாளரா என கேட்டதால் அவருக்கு கோபம்.

திருமாவளவனின் கண்ட்ரோலில் விசிக இல்லை. இந்தியாவின் மிகப்பெரிய கட்சி, உலகத்தின் மிகப்பெரிய கட்சி பிஜேபி – பாரதிய ஜனதா கட்சியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஒப்பிடும் அளவுக்கு நாங்கள் கீழே செல்லவில்லை என்றார். மத்திய அரசு எங்கேயும் குலக்கல்வியை ஊக்குவிக்கவில்லை தமிழக அரசுதான் முடி திருத்துவதற்கான பயிற்சி, சலவை தொழிலாளர்களுக்கான பயிற்சி, மீனவர்களின் குழந்தைகளுக்கான பயிற்சி என ஜாதியை மையமாக வைத்து குலக்கல்வியை ஊக்குவிக்கிறது என்றார்.

விஸ்வகர்மா திட்டத்திற்கு பலர் பதிவு செய்து வருகின்றனர் அவர்களுக்கான நிதி உதவியை மத்திய அரசு செய்து வருகிறது. டிஎம்கே பைல்ஸ் ஒன்று விட்டுள்ளோம், பைல்ஸ் இரண்டு விட்டுள்ளோம், தேர்தல் நேரத்தில் பைல்ஸ் மூன்று விடுகின்ற முயற்சியில் இறங்கி இருக்கிறோம். பைல்ஸ் மூன்றில் கூட்டணி கட்சிகளை இணைத்து வெளியிட உள்ளோம். கூட்டணி கட்சிகள் தப்பித்து சென்று விடக்கூடாது. இன்று தமிழகத்தில் வருகின்ற பல டெண்டர்களை கூட்டணி கட்சியினர் எடுத்துள்ளனர்.

கூட்டணி கட்சியை சார்ந்து இருக்கக்கூடிய இந்த டெண்டர்கள் அனைத்தும் யார் யாருக்கு சென்றுள்ளது திமுக ஆட்சிக்கு வந்த பின் இந்த 3 ஆண்டுகளில் டெண்டர்கள் யார் யாருக்கு சென்றுள்ளது என்பதை முழுமையாக அலசி ஆராய்ந்து அது யாருக்கு சென்றுள்ளது எந்த நிறுவனத்திற்கு சென்றுள்ளது அவர்களுக்கும் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கும் என்ன சொந்தம் என 2025 இல் மக்கள் மன்றத்தில் வைக்க உள்ளோம். டிஎம்கே பைல்ஸ் ஒன்று மற்றும் இரண்டை விட பைல் 3 தமிழகத்தில் டெண்டர் அனல் ஆபீஸ் தான் மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.

இவ்வளவு பெரிய டெண்டர்கள் கடைசியாக உள்ளூர் அமைச்சரின் மச்சானுக்கு தான் செல்லும் என்பது அதை பார்த்தாலே தெரிந்து விடும் மக்களுக்கு கொடுக்கக்கூடிய பணம் எங்கிருந்து வருகிறது என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வரும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *