திமுக தலைவருக்கே வேட்பாளர்கள் முடிவு செய்யும் அதிகாரம். தலைவரை திட்டினால் கட்சியில் இருக்க முடியாது. ஆகவே என்னை திட்டுகிறார்கள் என கே.என்.நேரு பேட்டி

திமுக தலைவருக்கே வேட்பாளர்கள் முடிவு செய்யும் அதிகாரம்.  தலைவரை திட்டினால் கட்சியில் இருக்க முடியாது. ஆகவே என்னை திட்டுகிறார்கள் என கே.என்.நேரு பேட்டி

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  கோட்டாட்சியர் விஸ்வநாதனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக முதன்மைச் செயலாளர் கே..என்.நேரு
2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில்  கருணாநிதி முதல்வராக இருந்த போது தனியார் மின் நிலையங்களும் அரசு மின் நிலையங்களும் திமுக ஆட்சியில்தான் அனுமதி வழங்கப்பட்டது.
தனியார் மின் உற்பத்தியாளர்கள் தாமத்தினால் தான் செயல்படுத்த முடியவில்லை ஆட்சி முடிந்துவிட்டது. 

2011 ஆம் ஆண்டு அதிமுக பொறுப்பேற்ற உடன் மின்சார திட்டங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. தற்போது முதல்வர் மின் மிகை மாநிலம் என அதனால்தான் குறிப்பிடுகிறார். ஆனால் எம்ஜிஆர் ஆட்சி செய்த பிறகு இவர்கள் எந்த புதிய மின் திட்டங்களையும் உருவாக்கவில்லை . திமுக ஆட்சியில் தான் புதிய மின் உற்பத்தித் திட்டங்களும் உருவாக்கப்பட்டதாக பதிலடி கொடுத்தார்.

அதிமுக ஆட்சியை திமுக தலைவர் ஸ்டாலின் கவிழ்க்க முயற்சி செய்திருந்தார் என குற்றசாட்டு எழுகிறதே என்ற கேள்விக்கு முயற்சி செய்திருந்தால் ஜெயித்திருப்போம். கருணாநிதி சொன்னார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு  தான் முதல்வராக வர வேண்டும் என்றார். முயற்சி செய்திருந்தால் நிச்சயமாக  ஜெயித்திருப்போம் .

திமுகவில் எல்லாருக்கும் சீட்டு கொடுக்க வேண்டும் என்றால் கடவுள்லால் தான் முடியும்.எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி  வேட்பாளரை  தேர்ந்தெடுப்பது சிரமம். வேட்பாளர் தகுதி கட்சிக்காக உழைத்து பல இன மக்களை கவர வேண்டும் என்ற அடிப்படையில்  வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைவரையும் ஒத்துக்கொள்ளும் வேட்பாளர் என்றால் தேர்தல்யே தேவை இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு திருச்சியில் சீட்டு கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு திருச்சி ,கரூர் பாராளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாத்தையும் அவர்களையும் கொடுத்து விட்டால் நாங்கள் என்ன செய்வது மூவர்ண கொடியை ஏற்றி வாழ்த்திட்டு போக வேண்டுமா என்றார். கூட்டணி கட்சிகளுக்கு
எந்த சிறு வருத்தமும் கிடையாது. திமுக தலைவர் அனைவரையும் அழைத்து இணைத்துதான் பொறுமையாக திரும்பத் திரும்ப பேசி கூட்டணி தொகுதி பங்கீடு முடித்துள்ளார் .

திமுக மனஉளைச்சல் ஏற்படுத்தியதால் தான் ஜெயலலிதா மரணமடைந்தாக அதிமுக குற்றம் சசாட்டுகின்றனர் என்ற கேள்விக்கு அதிமுக கூட தான் என் வழக்கு போட்டார்கள் கொலை முயற்சி வழக்கு கூட தான் மன உளைச்சலுனு சொல்லமுடியுமா என கேள்வி எழுப்பினார்.

எங்களுக்கு இட்ட பணி என்னவோ அது தவிர வேறு ஏதும் செய்ய முடியாது.கூட்டணி கட்சிகளை  பேச வைக்க வேண்டும் என்று சொன்னார்கள்.வேட்பாளர்கள் முடிவு செய்வது தலைவருடைய அதிகாரம். மற்றவர்கள் தலையிடுவதற்கு அதிகாரம் கிடையாது. தலைவரை திட்டினால் கட்சியில் இருக்க முடியாது. ஆகவே என்னை திட்டுகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதியிலும் உறுதியாக வெற்றி பெறுவோம் என பதிலளித்தார்.

வேட்புமனுத் தாக்கலில் கே.என்.நேரு தனக்கு அசையும் சொத்து ரூ ஒரு கோடியே 5 லட்சம்,அசையா சொத்துரூ 79.29(79 லட்சத்து 29 ஆயிரம்) உள்ளதாகவும் கடன் ரூபாய் 2 கோடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU