Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திமுக பிரமுகர் மணல் கடத்தல் விவகாரம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்-3 பேர் கைது

திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகே முத்தபுடையான்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடப்பதாக போலீஸிக்கு வந்த தகவலையடுத்து கடந்த 14 ம் தேதி  அதிகாலை தனிபடை போலீஸார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருட்டுதனமாக மணல் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை பிடித்தனர். தொடர்ந்து 2 டிப்பர் லாரி மற்றும் ஒரு ஜேசிபி வாகனத்தையும் பறிமுதல் செய்து மணப்பாறை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் மணல் கொள்ளையில் ஈடுப்பட்ட வாகனங்கள் திமுக வின் கிழக்கு ஒன்றிய பொருப்பாளர் ஆரோக்கியசாமிக்கு 
 சொந்தமானது என்பதால் அரசியல் தலையீடு காரணமாக வாகனம் மற்றும் மணல் கடத்தல் ஈடுபட்டவர்களை சிறிது நேரத்தில் போலீஸார் விடுவித்தனர்.

இச்சம்பவம் பல்வேறு தரப்பிலிருந்து போலீஸாருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,
இந்த விவகாரம் டிஜிபி அலுவலகம் வரை சென்றதையடுத்து வாகனங்களை பிடித்து வழக்கு பதிவு செய்ய டிஸ்பி க்கு உத்தரவு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆரோக்கியசாமியின் வீட்டிற்கு சென்ற டிஎஸ்பி பிருந்தா, இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் விவகாரம் குறித்து எடுத்து கூறி 2 லாரி, ஜேசிபி, மற்றும் டிரைவர்கள் மூவரை ஒப்படைக்க கோரி வெகு நேரமாக நடந்த பேச்சுவார்த்தையில், இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் டிஎஸ்பி பிருந்தா கெஞ்சி கதறியுள்ளனர்.

ஆனால் ஒப்படைக்க மறுத்த ஆரோக்கியசாமி உங்களால் முடிந்ததை பார்த்துகங்க என கறாராக பேசியுள்ளார். 

பின்னர் இரு தரப்புக்கும் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஆட்களை ஒப்படைக்காமல் ஒரு லாரி மற்றும் ஒரு ஜேசிபியை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்..

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து மணப்பாறை கிழக்கு திமுக ஒன்றிய பொருப்பாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஆரோக்கியசாமியை நீக்கி வைக்கபடுவதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் மணல் கடத்தல் வாகனங்களை விடுவித்ததாக இன்ஸ்பெக்டர் அன்பழகனை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டிஐஜி ராதிகா உத்தரவிட்டார்.

இதனையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்துள்ளனர், மேலும் தலைமறைவாக உள்ள முன்னால் திமுக ஒன்றிய பொருப்பாளர் ஆரோக்கியசாமியை  தேடி மணப்பாறை போலீசார் வருகின்றனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *