Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கபடி போட்டியில் ரைடு போன திமுக சட்டமன்ற உறுப்பினர் – உற்சாகமடைந்த ரசிகர்கள்

திருச்சி மாவட்டம், அல்லித்துறையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா டிராபி 2021 கபாடி போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அமைப்பாளராக கலந்து கொண்ட ஶ்ரீரங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி போட்டியை துவக்கி வைத்தார். அப்போது திடீரென கபடி வீரர்கள் அணியும், டிசர்ட் ஷாட்ஸ் அணிந்து வந்த சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்.

சோமரசம்பேட்டை எம்பி விஜயபாரதி அணி வீரர்களுடன் சேர்ந்து கபடி விளையாடினார். இவர்களை எதிர்த்து வாசன் சிட்டி அணியினர் களம் இறங்கினர். எம்எல்ஏ களத்தில் இறங்கி வளையாடியாடுவதைக் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இறுதியில் சட்டமன்ற உறுப்பினர் விளையாடிய அணியான எம்பி விஜயபாரதி அணி 29 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இவர்களை எதிர்த்து விளையாடிய வாசன் சிட்டி அணி 7 புள்ளிகள் மட்டுமே பெற்றது.

போட்டியை துவக்கி வைக்கச் சென்ற இடத்தில் வீரர்களுடன் சேர்ந்து விளையாடி தமது அணியை வெற்றிபெறச் செய்து வீரர்களையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்திய சட்டமன்ற உறுப்பினரை பலரும் பாராட்டினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *