பெரம்பலூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நேற்று (03.01.2022) பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து பார்வையிட்டார். இந்த நிலையில் எம்.ஏல்.ஏ பிரபாகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அதே போல் அவரது உதவியாளர் மற்றும் கார் ஓட்டுநருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 31 பேர் சிகிச்சையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை பெரம்பலூரில் 245 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments