திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்காரின் 130-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், துறையூர் வேட்பாளர் ஸ்டாலின் குமார், ஸ்ரீரங்கம் வேட்பாளர் பழனியாண்டி, திருச்சி கிழக்கு வேட்பாளர் இனிகோ இருதயராஜ், விராலிமலை வேட்பாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் திமுகவினர் அம்பேத்காரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr




            
            
            
            
            
            
            
            
            
            


Comments