2021 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பிரதான அரசியல் கட்சிகள் போட்டி போட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக வாக்காளர்களை கவரும் வகையில் சமூக வலைத்தளங்களில் விதவிதமான தேர்தல் விளம்பரம் அதிகளவு காணப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் 45வது பகுதியில் திமுக மற்றும் அதிமுகவினர் போட்டி போட்டு கொண்டு தேர்தல் பிரச்சார விளம்பரங்களை செய்து வருகின்றனர். கடந்த மாதம் பெரியமிளகுபாறை பகுதியில் உள்ள மளிகை கடை, டிபன் கடை, இறைச்சி கடை உள்ளிட்டவைகளின் பெயர் பலகைக்கு பதிலாக திமுகவின் தேர்தல் பிரச்சார வாசகங்கள் *( ஸ்டாலின் தான் வாராரு விடியல் தர போறாரு )* இடம் பெற்ற ஒளிரும் பெயர் பலகை வைக்கப்பட்டது.
இதற்கு போட்டியாக அதிமுக சார்பில் இதே போன்று விளம்பரத்துடன் கூடிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் *( 4.7 லட்சம் பசுமை வீடுகள் )* இடம் பெற்றிருக்கின்றன. 45 வார்டு பகுதியில் பார்க்கும் இடமெல்லாம் திமுக – அதிமுகவின் விளம்பர பலகைகள் அதிகளவு காணப்படுகிறது. தேர்தல் நேரத்தில் போட்டி போட்டு கொண்டு பிரச்சாரம் செய்து வரும் அரசியல் கட்சியினர் மக்களின் கோரிக்கைகளை போட்டி போட்டு கொண்டு நிறைவேற்றினால் மகிழ்ச்சி என தெரிவிக்கின்றனர் மேற்கு தொகுதி வாக்காளர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments