ஆகஸ்ட் 31ம் தேதி வரை கடன் வசூலிக்க கூடாது!ஆட்சியர் எச்சரிக்கை!!
வங்கி கடன் தவணை தள்ளி வைப்பு காலம் ஆகஸ்டு 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மீறும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள், நிதி வங்கிகள் மற்றும் உள்ளூர் பகுதி வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகள், நிறுவனங்கள் அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வேளாண் கடன்கள், சில்லறை மற்றும் பயிர் கடன்கள் உட்பட அனைத்து விதமான கடன் தவணை தள்ளிவைப்பு காலம் ஆகஸ்டு 31 வரை நீட்டிக்க பட்டுள்ளதாகவும், ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.