திருவெறும்பூர் அருகே துவாக்குடி அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி கல்லூரி முடிந்து கல்லூரியை பூட்டி விட்டு சென்ற நிலையில் இன்று காலை 10:30 மணி அளவில் கல்லூரியில் சுத்தம் செய்யும் வேலை பார்க்கும் பவித்ரா என்ற பெண் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் அலுவலகம் மற்றும் கணினி ஆய்வகத்தை பார்த்த பொழுது அலுவலகம் மற்றும் ஆய்வகஅறையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு உள்ளே பார்த்த பொழுது ஒரே புகை மண்டலமாக இருந்துள்ளது இது குறித்து பவித்ரா உடனடியாக கல்லூரி முதல்வர் சத்யாவிற்கு தகவல் கொடுத்துள்ளார்,
அதன் அடிப்படையில் சத்யா துவாக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் வணிகவியல் துறை தலைவர் செல்வேந்திரனுக்கும் மற்ற துறை பேராசிரியர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபொழுது வணிகவியல் தலைவர் செல்வேந்திரன் மேஜையில் இருந்த அவரது தனிப்பட்ட அவனங்கள் மற்றும் மாணவ மாணவிகளின் ஆவணங்கள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது அதேபோல் ஆய்வகத்தில் இருந்த ஆவணங்களும் எரிந்து தீக்கரையாகி உள்ளது அந்த இரண்டு அறைகள் முழுவதும் புகை மூட்டமாக இருந்துள்ளது.
மேலும் அங்கு இருந்த இன்வெர்ட்டர் பேட்ரியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
மேலும் இதுகுறித்து உடனடியாக துவாக்குடி போலீசார் திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் திருச்சி கைரேகை பிரிவு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீ அணைப்பு துறையினர் அறைகளில் மேஜிகளில் இருந்து நெருப்பை அனைத்தனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் கணினி அறையில் இருந்த சுமார் பத்துக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர் ஜெராக்ஸ் மிஷின் ஆகியவற்றிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் மேலும் அலுவலக பீரோவில் இருந்த ஆவணங்களும் அப்படியே உள்ளது.
என்றும் மேஜையில் இருந்த ஆவணங்கள் மட்டுமே எரிந்து தீக்கரையாகி உள்ளது என்றும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி ஆசிரியர்கள் கூறி வருவதுடன் இது சம்பந்தமாக கல்லூரி கல்வி இயக்குனர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கல்லூரி வணிகவியல் துறை தலைவர் அரை மற்றும் ஆய்வகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments