மின்நுகர்வோர்களை ஏமாற்றி அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காக, நுகர்வோர்களின் செல்போன் எண்களுக்கு மின்சார வாரியத்தில் இருந்து அனுப்பப்படுவது போல், கட்டணம் கட்டாததால் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகிறது.
இதுபோன்று வந்தால் மின்நுகர்வோர்கள் பதற்றப்பட வேண்டாம். சிலர் அதுபோன்று தவறாக வரும் குறுஞ்செய்தியில் உள்ள லிங்க்கில் சென்று பார்த்து ஏமாற்றமடைகின்றனர். இதனை தடுப்பதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்சார வாரிய இணையதளத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் நுகர்வோர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, மின்சார கட்டணம் கட்டவில்லை என்று குறுஞ்செய்தி வந்தால் பதற்றம் அடைய வேண்டாம். உங்கள் மின் கட்டண ரசீதின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து இணையதளத்தில் சென்று சரிபார்த்து கொள்ளுங்கள். குறுஞ்செய்தியில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்.
அதில் இடம் பெற்றுள்ள லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம். உடனடியாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1930-யை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த தகவலை பகிரவும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments