திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் எரிவாயு நுகர்வு தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள், ஆகியோருடன் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தற்போதைய எரிவாயு இருப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள சமையல் எரிவாயு உருளைகளை அரசு விதிகளுக்கு மாறாக தனியார் எரிவாயு நிரப்பும் நிலையங்களில் நிரப்பக்கூடாது அதனால் விபத்துக்கள் ஏற்பட மிக வாய்ப்புள்ளது. எனவும், அனைத்து பொது மக்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு உருளைகளை பதுக்கவோ மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யவோ கூடாது. மீறினால் அரசு விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பான புகார்களை 9443461010, 9498190651 மற்றும் 9498158550 என்ற குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை, திருச்சிராப்பள்ளி அலகு, அலுவலக எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வரப்பெறுவதால் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. எரிவாயு தொடர்பான புகார்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0431-2411474 ஐ அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments