பள்ளி இடை நின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகரில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்த திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் குழுவினர் அந்தநல்லூர் ஒன்றியம், ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகர் பகுதியில் கல்வித்துறை சார்பாக சமூக ஆர்வலர்களின் உதவியுடன் பள்ளியிலிருந்து இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத திருச்சி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியர் அறிவுரையின் படி
திருச்சிராப்பள்ளி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பேபி தலைமையில், கல்வியாளர் சிவக்குமார், மாமன்ற உறுப்பினர் இராதா ஆகியோர் முன்னிலையில் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர், தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் அடங்கிய குழுவினர் வீடு வீடாகச் சென்று பள்ளிக்கு நீண்ட நாள் வருகை புரியாத மாணவர்கள், பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களையும் சந்தித்து கல்வியின் சிறப்புகளை கூறி மீண்டும் பள்ளிக்கு வருகை புரிய ஆவண செய்துள்ளார்கள்.
30 மாணவர்களை சந்தித்து அவர்களின் குடும்பச் சூழல் ஆகியவற்றை பார்த்தும் கேட்டும் அறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கிய பின்னர், 5 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தனர். 5 மாணவர்கள் தொழிற்கல்வி பயில உதவி கோரியுள்ளனர்.

18பேர் 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் உரிய வாய்ப்பு வழங்கினால் மீண்டும் விடுபட்ட பாடங்களை தேர்வு எழுத தயாராக உள்ளனர். 2 மாணவர்கள் உளவியல் ஆலோசனைக்கு அனுப்பப்பட உள்ளனர். சில மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மருத்துவ உதவி தேவைப்படுகிறது. இவை அனைத்தும் தொகுத்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கல்வி நலன் காப்பாற்றப்பட உள்ளது. நாளை ஸ்ரீரங்கம் ஜெ. ஜெ.நகர் குடிசை மாற்று வாரியப் பகுதியில் ஆய்வு நடைபெற உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments