திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த சரடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபு .பெரம்பலூர் மாவட்டம் திம்மூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து மகள் புவனேஸ்வரி யை கடந்த 6 வருடங்களுக்கு முன் (26) காதலித்து திருமணம் செய்துகொண்டார் தற்போது இவர்களுக்கு மிருதுளா (5), யமுனா (3), கிரிஜா 10 மாத குழந்தை, என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் விவசாய
குடும்பத்தைச் சேர்ந்த பிரபு தனது வயலுக்கு கூலி வேலை செய்ய வந்த 2 பெண்களிடம் தகாத உறவு வைத்துக் கொண்டு , சரியாக வீட்டுக்கு வராமலும் குழந்தைகளை பார்க்காமலும் இருந்து வந்துள்ளார் பிரபு.
இது தொடரபாக கணவன் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நான் உன்னோடு மட்டும் வாழ வேண்டுமானால் 30 பவுன் நகை மற்றும் பணம் கொண்டு வா என கேட்டு மிரட்டியுள்ளார் பிரபு.
வரதட்சனை கொடுக்க முடியாதென புவனேஸ்வரி கூறவும் , கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி மற்றும் மூன்று குழந்தைகள் என நான்கு பேரையும் பிரபு வாயில் விஷம் ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதனால் அன்றைய தினமே புவனேஸ்வரி தனது மூன்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெரம்பலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புவனேஸ்வரி, அவரது கணவர் மீது புகார் கொடுத்ததின் பேரில் மகளிர் போலீஸார் இருவரையும. சமரசம் செய்து சேர்ந்து வாழவைத்தனர்.
பிரபு, புவனேஸ்வரி அவர்களது மூன்று குழந்தைகள் என 5 பேரும் எவ்வித பிரச்சினை இன்றி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் 19 ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் புவனேஸ்வரி தனது தாயிடம் போன் மீண்டும் தனது கணவர் தன்னை கொடுமை படுத்தி அடித்து துன்புறுத்துவதாக அழுதுள்ளார்.
இந்த நிலையில் அன்று இரவே புவனேஸ்வரி உடல், முகம், உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் மர்ம்மான முறையில் இறந்துள்ளார். இதுகுறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் புவனேஸ்வரி யின் தாய் பானுமதி மருமகன் பிரபு மற்றும் பிரபுடன் கள்ளத்தொடர்பில் இருந்த மாரியம்மாள், செந்தாமரை ஆகிய மூவரது மீது புகார் கொடுத்ததின் பேரில் பிரபு விசாரணைக்காக கைது செய்யப்பட்டார் மேலும் பிரபு உடன் தொடர்புடைய இரண்டு பெண்களையும் சேர்த்து கைது செய்ய வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் லால்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி அரியலூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதுகுறித்து தகவலறிந்து கோட்டாட்சியர் வைத்தியநாதன் தாசில்தார் சித்ரா, சந்தேகப்படும் முறையில் இறந்துள்ள புவனேஸ்வரியின் மரணத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியல் போராட்டத்தினை கைவிட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments