திருச்சி அரியமங்கலம் எஸ். ஐ. டி. மைதானத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பாக திராவிட பொங்கல் விழா தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது இவ் விழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள் உறியடித்தல், லெமன் ஸ்பூன், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர் ,
இன்னிசை நிகழ்ச்சி ,
சிறப்பு சொற்பொழிவு, ஆகியவை நடைபெற்றது.

பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன
இவ்விழாவில் திருமதி ஜனனி மகேஸ்
பொய்யாமொழி மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் சபியுல்லா மாவட்ட அவை தலைவர் கோவிந்தராஜ் மாநில அணி நிர்வாகி செந்தில் மற்றும் மாவட்ட மாநகர ஒன்றிய பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சமத்துவ திராவிட பொங்கலை கொண்டாடினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments