திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்தை நோக்கி இரண்டு தனியார் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்தை கடந்து தலைமை தபால் நிலைய சாலையில் மேலப்புதூர் அருகே வந்த பொழுது (சிவிஎஸ்) மற்றும் (நூர்) இரண்டு தனியார் பேருந்துக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

சிவிஎஸ் தனியார் பேருந்தை ஓட்டிய தங்கராஜ் அதிவேகமாக பஸ்சை ஓட்டியுள்ளார். மேலப்புதூர் அருகே வந்த பொழுது தனியார் பேருந்துகள் போட்டி போட்டு அதி வேகமாக ஓட்டு சென்ற பொழுது சிவிஎஸ் பேருந்து ஓட்டுனர் பிரேக் அடித்ததில் அப் பேருந்திலிருந்த நடத்துனர் கீழே விழுந்து காயம் அடைந்தார். இதில் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்து விட்டு இறங்கி ஓடினார்கள். தகவலறிந்த போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் விரைந்து வந்து இரண்டு பேருந்துகளையும் ஓட்டுனர், நடத்துனர்களிடம் விசாரணை

நடத்தினர். சிவிஎஸ் பேருந்து ஓட்டுநர் தங்கராஜ் குடிபோதையிலிருந்தது தெரியவந்தது.
காவல்துறையினர் அவரை சோதனை செய்ததில் அளவுக்கு அதிகமாக குடித்து இருந்தது தெரிந்தது.
அவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அவர் மீது வழக்கு பதிவு

செய்யப்பட்டுள்ளது. அதேபோல் (noor) தனியார் பேருந்து ஓட்டுனர் மீதும் வழக்கு பதிவு செய்து ஆயிரம் ரூபாய் அபராதம் போடப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் தொடர்ந்து தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு பேருந்துகளை இயக்குவது தொடர் கதையாக உள்ளதாக பயணிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தனியார் பேருந்துகளை அதிவேகத்தில் இயக்குபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும்.தனியார் பேருந்தை மது போதையில் ஓட்டி பயணிகளை அலறவிட்ட ஓட்டுநர் சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும் இனிமேல் இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments