திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மினி பேருந்தை நாகம்மா நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மணி என்பவர் ஓட்டி வந்தார். சுமார் 30 பயணிகளுடன் காவேரிப்பட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது வாலிஸ்புரம் அருகே பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதனையடுத்து சுமார் எட்டுக்கும் மேற்பட்ட 108 வாகனங்கள் மூலம் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் விசாரணை மேற்கொண்டதில் ஓட்டுநர் மணி செல்போன் பேசியபடி பேருந்து இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments