துறையூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு முன்னறிவிப்பின்று வராத காரணத்தினால் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர், பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு..
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் துறையூரில் இயங்கி வருகிறது, போக்குவரத்து ஆய்வாளராக செந்தில்குமார் பணிபுரிந்து வருகிறார்.அலுவலகம் வாரத்தில் திங்கள், வியாழன் இரு நாட்கள் செயல்படும் நிலையில் இன்று
அலுவலகத்தில் வாகனங்கள் பதிவு செய்தல், ஓட்டுனர் உரிமம் பெறுதல், ஆர் சி ரினுவல் செய்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வெகு தூரத்தில் இருந்து அதிக செலவு செய்து ஆன்லைன் மூலம் பதிவு செய்து இன்று வந்த நிலையில் காலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வராததால்
சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டனர். மதியம் வரை காத்திருந்து பெரும் ஏமாற்றத்துடன் அதிக தொலைவில் இருந்து வந்து செலவும் செய்து பணி நடக்கவில்லை என குழம்பியபடி சென்றனர், வாரத்தில்,இரு நாள் வருபவர்கள் இதுபோன்று கால தாமதமாக வந்ததால் பல்வேறு நிலைகளில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
மோட்டார் வாகன ஆய்வாளர் வராததற்காக தகவல் அறிய ஸ்ரீரங்கம் கோட்ட வட்டாரா போக்குவரத்து அலுவலர் சுரேஷ் பாபுவை தொலைபேசியில் அழைத்த பொழுது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது..எனவே போக்குவரத்து அலுவலகத்திற்கு நிரந்தர அதிகாரிய அமைத்து தடையின்றி ஓட்டுனர் உரிமம் மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயிற்சி பள்ளி ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments