Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

“போதை இல்லா பாதை” சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

இணைந்த கைகள், பன்னாட்டு தன்னார்வ செயற்பாட்டாளர்கள் இயக்கம் மற்றும் ஊழல் எதிர்ப்பு சமூக அமைப்பு, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து போதை இல்லா பாதை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியினை திருச்சி காட்டூர் புனித அந்தோனியார் உயர்நிலைப் பள்ளியில் நடத்தியது. பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி ஆன்டனி மேரி வரவேற்றார்.

இணைந்த கைகள் நிர்வாக அறங்காவலர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். திருச்சிராப்பள்ளி ஆத்மா மருத்துவமனை சமூக மனநல ஆலோசகர் கரன் லூயிஸ் போதையில்லா பாதை குறித்து சிறப்புரையாற்றினார். போதை பழக்கத்தில் ஈடுபடுவோர் ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்லி, இதற்காக தான் நான் போதை பழக்கத்திற்கு அடிமையானதாக ஒரு காரணத்தை சொல்கின்றனர்.

ஆனால், இதனால் உடல் மற்றும் மனநல பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். போதைப்பொருட்கள் நுகர்வானது நாளடைவில் போதைப்பொருள் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மனநல ஆலோசனை மூலம் மீட்டெடுக்கலாம்.

போதை பழக்கத்திற்கு அடிமையான பெற்றோரால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கற்றல் இடை நிற்றலுக்கு ஆளாகிறார்கள். நமது உடலானது பல கோடி மதிப்பு உடையது ஆகும். இந்த மதிப்பீடானது உடல் உறுப்பு சிகிச்சை மருத்துவ செலவை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. 

ஆகையால் ஒவ்வொருவரும் தனது உடலை மனதை பேணி காக்க வேண்டும் என்றார். சோழன் நகர் நலச்சங்க தலைவர் துரைக்கண்ணு, பாலாஜி நகர் விரிவாக்க நலச்சங்க செயலர் ராஜேந்திரன், மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பு நிர்வாக அறங்காவலர் செல்வராஜ், ராஜப்பா நகர் நலச்சங்க துணைத்தலைவர் முருகையன், சமூக செயற்பாட்டாளர்கள் ஜோசப் ஆரோக்கியராஜ், அரிமா உமாராமசாமி, பரமநாதன்,

முத்துச்செல்வி உட்பட பலர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். நிறைவாக அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *