அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையால் திருச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறை!

அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையால் திருச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறை!

 கொரானா  தொற்று  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை மட்டுமே கொரானா உறுதி செய்யப்பட்டவர்களின்   எண்ணிக்கை 940 ஆக அதிகரித்துள்ளது. 
இதன் எதிரொலியாக ஆக்சிஜன் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 


தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன்  படுக்கை பற்றாகுறை ஏற்பட்டு ஏற்கனவே 10 நாட்கள் கடந்த நிலையில் தற்போது  மிகப்பெரிய கொரானா சிகிச்சை மைய்யமாக செயல்பட்டுவரும்   மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


 கிட்டதட்ட 293 ஆக்சிஜன்  படுக்கைகளும் 60 ICU படுக்கைகளுடன் இருந்த நிலையில் தற்போது அனைத்துப் படுக்கைககளும்  நிரம்பியுள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  திவ்யதர்ஷினி இ.ஆ.ப கூறுகையில்  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்ட20 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய 60 படுக்கைகள் நிரம்பியுள்ளன. மணப்பாறை அரசு மருத்துவமனையில் தற்போது ICU படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. 
முதல் அலை  மற்றும் இரண்டாவதுஅலையின் பாதிப்பு அதிகரிக்க     காரணம்  யாதெனில் முதல் அலை போலவே இரண்டாவது அடையும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மக்கள் நம்புகின்றனர் எனினும் பாதிப்பினை பற்றிய முழுமையான விழிப்புணர்வு மக்களிடம் சென்று சேரவில்லை அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது மறந்து செயற்படுகின்றனர் ஆனால் இதுவே மிகப் பெரும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது மக்கள் நோய் தொற்று ஏற்பட்டு ஏழு முதல் எட்டு நாட்களுக்கு பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பின்பு   மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதனால் அவர்ளுக்கு ஆக்சிஜன் படுக்கைககள் கட்டாயமாக்கப்படும் நிலை ஏற்படுவதால் படுக்கைவசதி தட்டுபாடு ஏற்படுகிறது. இதனால் தான்  தனியார் மருத்துவமனைகளில்  படுக்கை வசதிகளும் குறைந்துள்ளது எனவே சாதாரணமாக நோய்த்தொற்று ஏற்படுபவர்களை  வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொள்வதற்கு வலியுறுத்தி வருகிறோம் என்கிறார் திருச்சி காவேரி மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்.டாக்டர் செங்குட்டுவன். மேலும் கொரோனா சிகிச்சை மையமாக இல்லாத ICU  படுக்கைகளும் தற்போது நிரம்பியுள்ளன தனியார் மருத்துவமனைகளில் தற்போதைய படுக்கை வசதி ஏற்படுத்துவதற்கான ஆள் பற்றாக்குறை ஏற்படுகின்றது என்கிறார். பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி  கொரானா பாதிப்பை எவ்விதத்திலும் குறைக்க இயலாது அவர்கள் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தல்  அவசியம் என்கிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd