Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் டிஜிட்டல் பலகை, அறிவிப்பு அமைப்பு பழுது – சரிசெய்ய துரை வைகோ கோரிக்கை

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் மின்னணு தகவல் பலகை (Digital Display Board) மற்றும் பொது அறிவிப்பு (Announcement) அமைப்புகள் செயல்படாமல் இருப்பதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த ரயில் நிலையத்தை தினமும் பல நூற்றுக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மின்னணு தகவல் பலகை செயல்படாததால் எந்த ரயில் எந்த பிளாட்பாரத்திற்கு வருகிறது என்பது குறித்து பயணிகள் முன்கூட்டியே அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், பொது அறிவிப்பு அமைப்பும் செயல்படாததால் முதியவர்கள், பெண்கள் மற்றும் அந்த நிலையத்தை முதன்முறையாக பயன்படுத்தும் பயணிகள் உள்ளிட்ட பலருக்கும் ரயில் வருகை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இந்த பிரச்சினை குறித்து இன்று (13.03.2026) தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தின் கோட்ட மேலாளர் (DRM) அவர்களுக்கு கடிதம் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடுத்துரைத்தேன். அதற்கு அவர் இந்த பிரச்சினையை உடனடியாக கவனித்து விரைவில் சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

திருவெறும்பூர் ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் சிரமமின்றி ரயில் வருகை, பிளாட்பார்ம் உள்ளிட்ட தகவல்களை பெறும் வகையில் மின்னணு தகவல் பலகையும் பொது அறிவிப்பு அமைப்பும் விரைவில் சீரமைக்கப்படும் என நம்புகிறேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *