Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய ஒன்றிய அரசுக்கு துரை வைகோ கோரிக்கை

போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் அமீரக நாடுகளில் (குறிப்பாக வளைகுடா பகுதியில்) பணியாற்றி வரும் இந்தியர்கள், அங்கு சுற்றுலா சென்றுள்ளவர்கள், மேலும் ரமலான் மாதத்தில் மெக்காவுக்குச் சென்று உம்ரா செய்ய புனிதப் பயணத்தை மேற்கொண்டுள்ள இஸ்லாமிய சகோதரர்கள் ஆகிய அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்காக, ஒன்றிய அரசு விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

இதுகுறித்து நான் எழுதிய கடிதத்தில், குறிப்பாக தமிழர்கள் உட்பட எந்தவொரு இந்தியருக்கும் எவ்வித சிரமங்களோ, ஆபத்தோ ஏற்படாத வகையில், அவர்களுக்கு இந்தியா என்றும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் நிற்கிறது எனும் நம்பிக்கையை வலுவாக ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.

மேலும், அங்கு அவர்களுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படுகிற நிலை வருமேயானால், உடனடியாக அவர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவது நமது தேசத்தின் முதன்மைக் கடமையாகும் என்றும் எடுத்துரைத்துள்ளேன்.

ஒன்றிய அரசை இவ்வாறு வலியுறுத்துவதோடு, அவர்கள் அனைவரது பாதுகாப்பிற்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *