Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி அரசு மருத்துவமனை இருதய துறைக்கு எக்கோ கருவி நன்கொடை

கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை – இருதய துறைக்கு நவீன எக்கோ மெஷின், Pulsed Electromagnetic stimulator மற்றும் Combined Ultrasound therapy நன்கொடையாக வழங்கப்பட்டது!

திருச்சி மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்தில், மாவட்ட ஆட்சியர் திரு. திரு. மா. பிரதீப் குமார், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, திருச்சியின் இருதய நோய் (கார்டியாலஜி) துறைக்கு, மொத்தம் மூன்று பிரோப்களுடன் (வளர்ந்தவர்கள், குழந்தைகள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரோப்கள்) இணைக்கப்பட்ட ஒரு நவீன எக்கோ கார்டியோகிராபி மெஷின் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

நமது இருதய மருத்துவ துறையில் தினமும் சுமார் 200 வரை எக்கோகார்டியோகிராபி பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறோம். இருதய மருத்துவத்திற்காக திருச்சி தவிர புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்lங்களிலிருந்து இத்தகைய பரிசோதனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த நவீன எக்கோ மெஷின் இருதய துறைக்கு பெரிதும் உதவக்கூடியதாக அமையும்.

இந்த எக்கோ மெஷின் மூலம் வயது முதிர்ந்தோர், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான இருதய பரிசோதனைகள் மிக துல்லியமாகவும் விரைவாகவும் செய்யும் வசதி கிடைக்கப்பெறுகிறது. இதன் மூலம் நமது மாவட்ட மருத்துவமனை மருத்துவ தரத்தை மேலும் உயர்த்தி, அனைத்து சமூக மக்களுக்கும் சிறந்த சிகிச்சைக்கான வாய்ப்பை அளிக்கும்.

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் எலும்பியல் துறைக்கு (வலி மேலாண்மை பிரிவு) இரண்டு மேம்பட்ட மருத்துவ உபகரண அலகுகளை – ஒரு துடிப்பு மின்காந்த தூண்டுதல் மற்றும் ஒருங்கிணைந்த கேளா ஒலி (அல்ட்ராசவுண்ட்) சிகிச்சை கருவியை – மாவட்ட ஆட்சியர் நன்கொடையாக வழங்கி திறந்து வைத்தார்.

இந்த அதிநவீன சாதனங்கள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி மேலாண்மை சிகிச்சையின் தரத்தை, குறிப்பாக தசைக்கூட்டு கோளாறுகள் மற்றும் நாள்பட்ட வலி நிலைகளை நிர்வகிப்பதில் நன்கு மேம்படுத்தும்.நோயாளி பராமரிப்பை மேம்படுத்துவதற்கும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு அர்த்தமுள்ள படியைக் குறிக்கும் இந்த சிந்தனைமிக்க பங்களிப்பிற்காக மாவட்ட ஆட்சியருக்கு மருத்துவமனை நிர்வாகம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது.

அனைத்து பொதுமக்களும் இந்த புதிய வசதிகளை பயன்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *