திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கருப்பையா தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப்குமாரிடம் தாக்கல் செய்தார். பின்னர் திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா செய்தியாளர்களிடம் கூறுகையில்…. கடந்த ஐந்து ஆண்டுகளாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். திருச்சி தொகுதி மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் எனது குரல் ஓங்கி ஒலிக்கும். மக்களோடு மக்களாக இருந்து செயல்படுவேன். காவேரி குண்டார் இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்துவேன்.

பொதுச் செயலாளரின் வழிகாட்டுதல்படி திருச்சிக்கு தனி தேர்தல் அறிக்கை கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்படும். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது டெல்டா மாவட்டங்களில் சாலை வசதிகள் பின்தங்கி இருக்கின்றன. நமது மாவட்டங்களில் சாலை வசதிகளை மேம்படுத்த நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புறநகர் மாவட்ட செயலாளர் ப. குமார் குற்றச்சாட்டு… துவாக்குடி பால்பண்ணை சர்வீஸ் சாலை திட்டப் பணிக்காக அதிமுக ஆட்சி காலத்தில் 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது ஆனால் திராவிட முன்னேற்றக் கழக அரசு அதனை செயல்படுத்தாமல் விட்டு விட்டார்கள். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்….. அதிமுகவின் பரப்புரை கூட்டத்தில் பொது செயலாளர் திமுக அரசை பற்றி மட்டுமே விமர்சனம் செய்தார்.

ஆனால் பாஜகவை பற்றி எந்தவித விமர்சனமும் செய்யவில்லை என்ற கேள்விக்கு? திருச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து 40 தொகுதி வேட்பாளர்களும் ஒரே இடத்தில் அறிமுகம் செய்து பரப்புரையை தொடங்கியுள்ளார் அந்த அளவிற்கு திருச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று தான் பரப்புரையை தொடங்கியுள்ள நிலையில் போகப் போக இந்த பரப்புரை எந்த அளவுக்கு சூடு பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எதற்கும் துணிந்தவர் எதிர்க்கத் துணிந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என புகழாரம். ஐந்து ஆண்டுகளாக திருச்சி பாராளுமன்ற தொகுதி வெற்றிடமாக இருந்ததை நிரப்புவதற்காக ஒரு துடிப்பான இளைஞரை அதிமுக நிறுத்தியுள்ளது.

மாநில தேர்தல் போலே தான் கட்சியின் செயல்பாடுகள் உள்ளது என்ற கேள்விக்கு? ன போகப் போக அது மாறும்… ஓடுற பாம்பு மிதிக்கிற வயசில உள்ள நபரை வேட்பாளரா நிறுத்தி உள்ளோம். இவருடைய வேகத்தையும் துடிப்பையும் திருச்சி மக்கள் பார்க்க இருக்கிறார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           10
10                           
 
 
 
 
 
 
 
 

 25 March, 2024
 25 March, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments