Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கல்விக் கொள்கை 2020 – “மதயானை” நூல் அறிமுக விழா

 அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” நூல் அறிமுக விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் திருச்சி மாவட்ட வாசகர் வட்டம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் சார்பாக நடைபெற்றது. வி.சி.க. மாநில துணைப் பொதுச்செயலாளர்-

சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், தேசிய நல்லாசிரியர்-கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர் நூல் அறிமுக உரையாற்றி சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் இரா.சரவணன், ஜமால் முகமது கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் அ.கா.காஜா நஜீமுதீன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு.கோ.கிருஷ்ணபிரியா, ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ் வாசகர் வட்ட தலைவர் திருமிகு.அல்லிராணி பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

மதயானை நூல் அறிமுக விழாவில்தேசிய நல்லாசிரியர் தங்கம் மூர்த்தி“எல்லா பள்ளிக்கூடங்களும் அறிவாலயங்களாக உள்ளது. இந்த அறிவாலயங்களை கமலாயங்களாக மாற்றும் வேலைதான் தேசிய கல்விக் கொள்கை” என்கிறது இந்நூல்- தசிய கல்விக் கொள்கை மீதான மிகுந்த கோபத்துடன் இந்நூலை எழுதியுள்ளார் தற்போதைய பொதுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கே மாணவர்கள் அச்சப்படும் போது, 3,5,10 வகுப்புகளில் பொதுத்தேர்வு எனச் சொல்கிறது தேசிய கல்விக் கொள்கை. ஏன்…? நீங்கள் எல்லாம் படிக்க வேண்டாம் என்கிறார்கள் – தேசிய நல்லாசிரியர்  

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் அன்பழகனார், மாண்புமிகு முதலமைச்சர் ஆகியோரின் சிந்தனைகளை எழுத்தாக்கி நமக்கு கொடுத்து சிந்திக்க வைத்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி – தேசிய கல்விக் கொள்கையை இனி திருத்த முடியாது! அதை நிறுத்ததான் வேண்டும்! கல்வி வளர்ச்சியை இருட்டடிப்பு

செய்வதற்கான திட்டம்தான் தேசிய கல்விக் கொள்கை – மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்நூலை எழுதி அறிவுப் புரட்சியை உருவாக்கியுள்ளார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆளூர் ஷாநவாஸ்அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அன்பில் தர்மலிங்கம்-அன்பில் பொய்யாமொழி ஆகியோரி வாரிசு என்பதை கடந்து, தந்தை பெரியார்-புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கை வாரிசு என்பதுதான் சரி! – 

மதம் பிடித்த மனிதர்கள்தான் இந்த தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளார்கள். யார் யாரெல்லாம் இந்த கல்விக் கொள்கையை உருவாக்கினார்கள் என்பதை முழுமையான தரவுகளோடு வழங்கியுள்ளார் எழுத்தாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  

 ஒன்றிய அரசு ‘மாநிலம்’ என்ற ஒன்றே இருக்கக் கூடாது என நினைக்கிறது. ‘சட்டமன்றம்’ என்ற ஒன்றே இருக்கக் கூடாது என எண்ணுகிறது  

தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப் படுத்துகிறார்கள். மும்மொழி கொள்கையை திணிக்கிறார்கள். ஆனால் இரண்டு மொழிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்குகிறார்கள்! – தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் கல்வித் திட்டங்கள் போல வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தபடுவதில்லை

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *