நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி பெரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் அலுவலர் வினோத் குமார் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது கீரிப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட மூன்று லட்சத்தில் பத்தாயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு மண்ணச்சநல்லூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதே போல் திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதியில் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட மூன்று லட்சத்து 26 ஆயிரத்து 570 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சி கிழக்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments