தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது முதல் தமிழக முழுவதும் தேர்தல் நன்நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 27 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
50 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் எடுத்துச் செல்லவும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லவும் தடைவிதிக்கப்பட்ட நிலையில்,
திருச்சி சஞ்சீவி நகர், சென்னை பைபாஸ் சாலை மற்றும் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் மற்றும் நிலைக்குழு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments