இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட இன்று (15.03.2026) முதல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதை தொடர்ந்து, புகார்களை விசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 என 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 27 பறக்கும் படை குழுக்களும் மற்றும் 27 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது 24 மணி நேரமும் இயங்கும்.

இக்குழுக்களை கண்காணிக்க மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. மேலும் 1800 599 000 001 மற்றும் 0431-2905846, 0431-2905921, 0431-2905578, 0431-2905591, 0431-2905813 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கும் அதிகமான தொகையினை ரொக்கமாக எடுத்து செல்ல வேண்டாம் எனவும், ரூ.10,000/-க்கும் அதிகமான மதிப்புள்ள புதிய பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments