திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகளுடனான தேர்தல் ஆலோசனை கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தை, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments