
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்கு பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகிய பணிகளில் ஆசிரியர்கள் மற்றும் இதர அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பணி வழங்கியதில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்யவும், இதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கை மனுவை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளித்தனர்.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், முதல் பயிற்சி வகுப்பில் உண்மையான காரணங்களுக்காக கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியான சிவராசு உறுதி அளித்துள்ளதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தெரிவித்தனர்.

இந்த மனு கொடுக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, திருச்சி மாவட்ட கிளை சார்பாக மாநில பொருளாளரும், திருச்சி மாவட்ட செயலாளருமான சே.நீலகண்டன் தலைமையில் நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           124
124                           
 
 
 
 
 
 
 
 

 26 March, 2021
 26 March, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments