திருச்சி கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள மின் கம்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த கான்கிரீட் மின்கம்பத்தில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது.

எப்போது விழும் என்ற நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தால் பேருந்து நிறுத்தத்தில் நிற்கக்கூடிய பயணிகள் அச்சத்துடன் அங்கு செல்கின்றனர். இதே போன்று இந்த பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள மின் கம்பமும் இதேபோன்று மிக மோசமாக ஆபத்தான நிலையில் உள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை உடனடியாக அகற்றி புதிய மின்கம்பம் நட வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments