திருச்சி மணிகண்டம் அருகே உள்ள மேக்குடியில் சாய்பாபா கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அந்த கோயிலை காந்திமதி என்பவர் நிர்வாகம் செய்து வருகிறார்.

அவரது மகன் கார்த்திகேயனின் மின்னஞ்சல் வந்த தகவலில் நாளை 6 மணியளவில் பெரிய அளவில் வெடிகுண்டு வெடிக்கும் என மெயில் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மணிகண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் மணிகண்டம் போலீசார் வெடிகுண்டு நிபுணர்க்கும் மோப்ப நாய்க்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டுதடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சாந்தகுமார் தலைமையிலான போலீசார் மெட்டல் டிடக்டருடன் சோதனை செய்தனர். மேலும் மோப்ப நாய் பொன்னி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட கோவிலை முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை தான் விசேஷம் என்றும் அந்த நாளில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் கோவில் நிர்வாகமும், பக்தர்களும் பீதி அடைந்திருந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்ததால் கோவில் நிர்வாகமும் பொதுமக்களும் காவல்துறையினரும் நிம்மதி அடைந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments