சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் 67-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே அவரது திருவுருவப்படத்திற்கு முசிறி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மற்றும் நகர்மன்ற தலைவர் செல்வராணி செயலாளர்கள் அண்ணாதுரை, சிவ சரவணன், வீரபத்திரன், உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன், எல் பி எஃப் தலைவர் சுப்பையா உள்பட நிர்வாகிகள் மற்றும் திமுகவின் தோழமைக் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




Comments