Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

வேலைவாய்ப்பு முகாம் – மத்திய மண்டல காவல்துறை தலைவர் தகவல்

திருச்சிராப்பள்ளி மத்திய மண்டலத்தில் காவல்துறையினரால் வருகின்ற (25.03.2023)-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கலையரங்கத்தில் திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகர காவல்துறையில்

தற்போது பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் சிறைத்துறையினர் ஆகியோரின் குழந்தைகள் மற்றும் மனைவி/கணவன்மார்களுக்கு மாபெரும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

2) அதுசமயம், காவல்துறையினரின் குடும்பத்தில் வேலை தேவைப்படும் குழந்தைகள் மற்றும் மனைவி/கணவன்மார்கள் மேற்கண்ட வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

3) அவ்வாறு கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் சிறைத்துறையினரின் ஆண்/பெண் குழந்தைகள் மற்றும் மனைவி/கணவன்மார்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களது பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொலைபேசி எண்கள் : சிவராஜ், காவல் ஆய்வாளர் – 94981 65533, 93454 23925 ரமேஷ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் – 94430 94489 

4) மேலும், திருச்சிராப்பள்ளி மாநகர எல்லைக்குட்பட்ட மற்றும் மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் சிறைத்துறையினரின் ஆண்/பெண் குழந்தைகள் மற்றும் மனைவி/கணவன்மார்கள் அந்தந்த மாவட்ட காவல் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தங்களின் பெயரினை பதிவு செய்து வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *