இன்று (24.10.2025) காலை 11 மணியளவில் திருச்சி, தேசிய தொழில் நுட்பம் கல்வி நிறுவன (NIT) கூட்டரங்கத்தில் நடைபெற்ற “Rozgar Mela” என்ற வேலைவாய்ப்புத் திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

இவ்விழாவில் வருமான வரித்துறை, அஞ்சல் துறை, இரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அரசு துறைகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 51,000 விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்த விழா இந்தியாவெங்கும் 40 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

திருச்சியில் நடைபெற்ற இந்த விழாவில், என்னுடன், நிதித்துறை இணையமைச்சர் திரு.பங்கஜ் சௌத்ரி பங்கேற்று 112 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஜி.அகிலா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

உடன் கழக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொகையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, எஸ்.கலியமூர்த்தி, மணவை தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments