திருச்சிராப்பள்ளி மாவட்டம், புலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுகுடி கிராமத்தில், துறையூர், மேலக்குன்னுப்பட்டியை சேர்ந்த பெருமாள் 49/25, த.பெ. கோவிந்தன், காட்டுக்கொட்டம், என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. மேற்படி விவசாய நிலத்தில் கடந்த 13.11.2025 அன்று காலை தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை ஊரல் போட்டு காய்ச்சி விற்பனை செய்து கொண்டிருந்த எதிரிகள் 1. பெருமாள் 49/25, த.பெ. கோவிந்தன், காட்டுக்கோட்டம், துறையூர், 2.சின்னதுரை 60/25, த.பெ. கரிவண்டன், குடித்தெரு, காட்டுக்கொட்டம், துறையூர் என்பவர்கள் மீது புலிவலம் கா.நி. குற்ற எண்.425/25, ச/பி. 4(1)(a), 4(g), r/w 4(1-A) TNP Act -ன் படி அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மேற்படி சிறையில் இருந்து வரும் எதிரிகள் 1. பெருமாள் 49/25, த.பெ. கோவிந்தன், காட்டுக்கோட்டம், துறையூர், 2. சின்னதுரை 60/25, த.பெ. கரிவண்டன், குடித்தெரு, காட்டுக்கோட்டம், துறையூர், தாலுக்கா, திருச்சி மாவட்டம் என்பவர்களை மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 02.12.2025-ம் தேதி திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 108 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளுக்கு சார்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments