“மின் சேமிப்பு வார விழா” வை முன்னிட்டு மின் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் 15:12.2025 (திங்கட்கிழமை) அன்று திருச்சி, தென்னூர் மண்டல அலுவலகத்தில் பொறிஞர்.M.கீதா, தலைமை பொறியாளர்/பகிர்மானம்/திருச்சி மண்டலம் அவர்கள் காலை 10:00 மணியளவில் மின்சார வாகன விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து மின் சேமிப்பு மற்றும் மின் சிக்கனத்தின் முக்கியத்துவத்தை பற்றி சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திருச்சி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட செயற்பொறியாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மின் சேமிப்பு Banner ஒட்டிய வாகனம் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட நகரியம் மற்றும் கிழக்கு கோட்டம் சார்ந்த பகுதிகளில் மின் சேமிப்பு மற்றும் மின் சிக்கனம் தொடர்பான விழிப்புணர்வு குறிப்புகள் ஒளிபரப்பப்பட்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
மேற்கண்ட செய்திக்குறிப்பினை தங்களது பத்திரிகையில்
வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments